எங்களுக்கு துரோகம் செய்த இபிஎஸ் தான் மன்னிப்பு கடிதம் தர வேண்டும்: டிடிவி.தினகரன் காட்டம்

சென்னை: ‘‘எங்களுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் தான் எங்களிடம் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும்’’ என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். முன்னாள் முதல்வர் காமராஜரின் 121வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள ஜிம்கானா கிளப்பில் அமைக்கப்பட்டுள்ள காமராஜரின் உருவ சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மாலை அணித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி.தினகரன் ஆகியோர் மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் மீண்டும் கட்சியில் இணைவதை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஊடகங்களின் வாயிலாக கூறியதை அறிந்தேன். எங்கள் 3 பேருக்கும் மன்னிப்பு கேட்க வேண்டிய இடத்தில், மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டிய இடத்தில் அவர்கள்தான் உள்ளனர். எங்களுக்கு துரோகம் செய்தவர்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள். எனவே, அவர்கள் தான் மன்னிப்பு கடிதம் கொடுக்க வேண்டும் நாங்கள் இல்லை. இதுவரை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

The post எங்களுக்கு துரோகம் செய்த இபிஎஸ் தான் மன்னிப்பு கடிதம் தர வேண்டும்: டிடிவி.தினகரன் காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: