×

சிறந்த இயற்கை விவசாய ஆராய்ச்சி மாணவருக்கு நம்மாழ்வார் பெயரில் புதிய விருது: கவர்னர் ஆர்.என்.ரவி அறிவிப்பு

சென்னை: சென்னை ராஜ்பவனில் நேற்று நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தினவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கவர்னர் ஆர்.என்.ரவி பேசுகையில், நம்மாழ்வார் முதுநிலை ஆய்வு விருது இயற்கை விவசாயம் என்கிற புதிய விருது வழங்கப்படும். இயற்கை விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மறைந்த டாக்டர் நம்மாழ்வார் பங்களிப்பை நினைவு கூரும் வகையில் இவ்விருது அளிக்கப்பட உள்ளது. கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் வளாகத்தில் ஆண்டு தோறும், இயற்கை விவசாயத்தில் சிறந்த ஆய்வு செய்து தேர்வாகும் மாணவருக்குப் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும். விருதுடன் ரூ.50,000 ரொக்கப்பரிசும், தங்கப் பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும். மேலும் நம்மாழ்வாரின் பணியையும், இயற்கை விவசாயத்தின் மேன்மையையும் நினைவு கூர்ந்த ஆளுநர் நம்மாழ்வாரை பெருமைப்படுத்தும் வண்ணம் இவ் விருதை அறிவித்துள்ளார்.

The post சிறந்த இயற்கை விவசாய ஆராய்ச்சி மாணவருக்கு நம்மாழ்வார் பெயரில் புதிய விருது: கவர்னர் ஆர்.என்.ரவி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Nammalwar ,Governor R.N. Ravi ,Chennai ,World Environment Day ,Chennai Raj Bhavan ,Governor ,R.N. Ravi ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...