×

வங்கக் கடலில் புதிய காற்று சுழற்சி தென்மேற்கு பருவமழை இன்று முதல் தீவிரம் அடையும்

சென்னை: வட கிழக்கு மாநிலப் பகுதிகளில் நிலை கொண்டு இருந்த காற்று சுழற்சி செயலிழந்தது. வங்கக் கடலில் அந்தமான் பகுதியில் தற்போது ஒரு புதிய காற்று சுழற்சி உருவாகி வருகிறது. இதனால் தமிழகத்தில் மழை பெய்யும் வாய்ப்புள்ள நிலையில், தென்மேற்கு பருவமழை இன்று முதல் மீண்டும் தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தை பொருத்தவரையில் வட மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் மாலை இரவில் நேற்று மழை பெய்தது. அதேபோல இன்றும் கள்ளக்குறிச்சி விழுப்புரம் சென்னை பகுதிகளில் பெய்யும்.

இதற்கிடையே 11ம் தேதி ஒடிசா பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி 12ம் தேதிக்கு பிறகு பரவலான மழை பெய்யும். 15ம் தேதி வரையில் தீவிர தென்மேற்கு பருவமழை ஆந்திரா தெலங்கான, ஒடிசா, சட்டீஸ்கர். தமிழ்நாடு ,கேரளா, மகாராஷ்ட்ரா, கோவா பகுதிகளில் பெய்யும். குறிப்பாக தென்மேற்கு பருவமழையை முன்னெடுத்து செல்லும் காற்று சுழற்சி உள்ளே நுழையும். அப்போது உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார் மற்றும் மகாராஷ்டிராவின் உள் பகுதிகளில் 13 மற்றும் 14ம் தேதிகளில் மழை பெய்யத் தொடங்கிவிடும். அதே நேரத்தில் தென் மாநிலங்களின் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. அப்போது கனமழை முதல் மிக கனமழை பெய்யும். மகராஷட்ரா, கோவா கார்நடாக பகுதிகளில் மிக கனமழை பெய்யும். தமிழகத்தில் தீவிரம் குறைந்து அரபிக் கடல் பகுதியில் மழை பெய்யும்.

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 9ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொருத்தவரையில் 6ம் தேதி வ ரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரியில் இருந்து 102 டிகிரியாக இருக்கும்.

The post வங்கக் கடலில் புதிய காற்று சுழற்சி தென்மேற்கு பருவமழை இன்று முதல் தீவிரம் அடையும் appeared first on Dinakaran.

Tags : Bay of Bengal ,Chennai ,north-eastern states ,Andaman region ,Tamil Nadu ,
× RELATED இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரி:...