×

இளங்கலை காட்சிக்கலை படிப்பு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்பிற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் 2025-26 கல்வியாண்டில் இளங்கலை காட்சிக்கலை எனும் நான்காண்டு கால பட்டப்படிப்பிற்கான பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

அதன்படி, இளங்கலை ஒளிப்பதிவு, காட்சிக்கலை, ஒலிப்பதிவு, இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல், படத்தொகுப்பு, உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் ஆகிய இளங்கலை காட்சிக்கலை பட்டப்படிப்புக்கு இணையதள வழியாக விண்ணப்பங்கள் பெறுவதற்கு கால அவகாசம் 4.6.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கலை ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகள் விருப்பமுள்ள பாடப்பிரிவுகளுக்கு www.filminstitute.tn.gov.in எனும் இணையத்தளத்தில், மாணவர் சேர்க்கைக்கான படிவத்தில் பூர்த்தி செய்து, விண்ணப்ப கட்டணம் செலுத்தி பதிவு செய்தும்,அனைத்து உரிய ஆவணங்களுடன் 4.6.2025 மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post இளங்கலை காட்சிக்கலை படிப்பு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu Government MGR Film and Television Training Institute ,Taramani, Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகாலையில் ஒரு சில...