ஆவின் பொது மேலாளர்கள், துணைப் பதிவாளர்களுக்கு (பால்பதம்) பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவு

சென்னை: பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கீழ்க்கண்ட 7 உத்தரவுகளை ஆவின் பொது மேலாளர்கள் மற்றும் துணைப் பதிவாளர்களுக்கு (பால்பதம்) பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

1.தொடக்க கூட்டுறவு சங்கங்களில் உள்ள உறுப்பினர்களில் செயல்படாமல் உள்ள உறுப்பினர்களை சங்கங்களுக்கு பால் ஊற்றும் உறுப்பினர்களாக மாற்றம் செய்ய உறுப்பினர் கல்வி, கறவை மாடு வாங்க கடன் பெற உதவுதல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

2.செயல்படாமல் உள்ள சங்கங்களின் (Dormant Societics) செயல்பாட்டின்மைக்கு உரிய காரணங்களை கண்டறிந்து அச்சங்கங்களை புத்துயிர் ஊட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

3.துணைப் பதிவாளர்கள் (பால்வளம்), (EO,SI,CSR) தங்களது மாவட்டத்தில் பால் உற்பத்தி ஆக வாய்ப்பு உள்ள பகுதிகளை கண்டறிந்து புதிய பால் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கி பால் வரத்தினை அதிகப்படுத்த வேண்டும் மேலும் இதுவரை சங்கம் அமைக்கப்படாத அனைத்து வருவாய் கிராமங்களிலும் உடனடியாக விவசாயிகளை தொடர்பு கொண்டு சங்கம் அமைக்க வேண்டும்.

4.சங்கங்களிலிருந்து பால் ஊற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாலுக்கான தொகையினை கால தாமதமின்றி அனைத்து உறுப்பினர்களுக்கும் உரிய நேரத்தில் பட்டுவாடா செய்ய வேண்டும்.

5.அனைத்து சங்கங்களிலும் உறுப்பினர்களுக்கு பயன்படும் கால்நடை பராமரிப்பு விவரங்கள், நோய்
பாதுகாப்பு விவரங்கள் மற்றும் திட்டங்களை சுவரொட்டிகள் மூலம் காட்சிப்படுத்த வேண்டும்.

6.உறுப்பினர்களுக்கு தேவையான கால்நடை தீவனம், மினரல் மிக்ஸர் தீவன விதை போன்றவைகளை தேவையான அளவில் இருப்பு வைத்து உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும்.

7.பால் கொள்முதல் செய்ய வாய்ப்புள்ள இடங்களில் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்.

The post ஆவின் பொது மேலாளர்கள், துணைப் பதிவாளர்களுக்கு (பால்பதம்) பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: