பொதுவாக விரதம் இருப்பது உடலுக்கும் மனதுக்கும், புத்துணர்வு அளிக்கும். ஆவணி மாதத்தில் விரதம் இருப்பது ஒருவரின் உடல்நலத்துக்கு மிகவும் நன்மை அளிப்பதாக கூறப்படுகிறது. மழைக்காலத்தின் ஒரு பகுதியாக ஆவணி மாதத்தில் சூரிய ஒளி குறைந்த அளவிலேயே இருக்கும். எனவே, இது ஜீரண சக்தியைக் குறைக்கும். அதன் விளைவாக, சுலபமாக ஜீரணமாகும் உணவுகளை சாப்பிட வேண்டும்.
அதனால் தான், பெரும்பாலானவர்கள் இந்த மாதத்தில் சைவ உணவுப் பழக்கத்தை மேற்கொள்கின்றனர். அது மட்டுமின்றி, விரதம் இருப்பதும் பரவலாக கடைக்பிடிக்கப்பட்டு வருகின்றது. விரதம் இருப்பது உணவு செரிமானாக் குழாயை சுத்திகரித்து, நுண்கிறுமிகள் தாக்குதலில் இருந்து இயற்கையான பாதுகாப்பு அளிக்கிறது.
ஆவணி மாதத்தில் விரதம் இருக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் :
விரதம் இருக்க வேண்டுமென்றால், ஒருவர் அதிகாலையில் எழுந்து குளிக்க வேண்டும். எப்போதுமே, சிவபெருமானை வழிபடும் முன், விநாயகரை வழிபடுவது வழக்கம். ஈசனுக்கான பிரசாதங்களில் வில்வ இலைகள், நீர், தேன், பால் மற்றும் வெள்ளை பூக்கள் ஆகியவை அடங்கும். பிரார்த்தனைகளுக்கான மந்திரங்களை கூறிய பிறகு, நீங்கள் உண்ணாவிரதத்தைத் தொடங்கலாம்.
மாலையில், சூரியன் மறையும் வரை விரதத்தைத் தொடரலாம். சில நபர்கள் நாள் முழுவதும் விரதங்களை மேற்கொள்ளாமல், குறிப்பிட்ட மணிநேரங்கள் வரை விரதம் இருக்கிறார்கள். அல்லது விரதமாக சமைத்த உணவுகளை உண்ணாமல், நாள் முழுவதும் பழங்களை மட்டும் உண்ணுகிறார்கள். சிலர், தண்ணீர் மட்டும் அருந்துவார்கள். தங்களின் சௌகரியத்துக்கு ஏற்றவாறு, விரதத்தை மேற்கொள்ளலாம்.
மாலை நேரத்தில் விரதத்தை முடிக்க, ஒரு சிலர் சிவன் கோயில்களுக்கு சென்று, ஈசனை வழிபட்டு, விரதத்தை நிறைவு செய்கின்றனர். சிலர், வீட்டிலேயே வழிபாட்டை நிறைவு செய்கின்றனர்.
ஆவணி நோன்பை கடைபிடிக்கும் ஒரு சில பக்தர்கள், 24 மணி நேரம் கடுமையான விரதம் மேற்கொள்கிறார்கள். அடுத்த நாள் காலையில் இவர்கள் விரதத்தை பூர்த்தி செய்கிறார்கள். பெண்கள் சோமவார விரதத்தை மேற்கொண்டால், தாங்கள் விரும்பும் வாழ்க்கைத்துணை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
கூடுதலாக, அனைத்து ஆசைகளும் விருப்பங்களும் நிறைவேறும் என்றும் பரவலாக நம்பப்படுகிறது. இந்தியா முழுவதும் இதைப் போன்று விரதங்களும், சடங்குகளும் பரவலாகக் காணப்படுகின்றன. ஆச்சரியமூட்டும் விதமாக, ஒரு சிலர், சோமவார விரதத்தை ஆண்டு முழுவதும் கடைபிடிக்கின்றனர். இதைப் போன்ற ஆழமான பக்தியும், அற்புதங்களும் இந்தியாவில் மட்டுமே காணப்படுகின்றன.
ருத்ராபிஷேக பூஜையை, நேர்த்தியான முறையில் செய்வது, சிவபெருமானின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.
ஆவணி மாதத்தில் சிவபெருமானை வழிபடுவதற்கான பூஜை :
சிவபெருமானைப் பூஜிக்க, கிழக்கு நோக்கி உட்கார வேண்டும். அதைத் தொடர்ந்து, வலது கையில் ஒரு சில துளிகள் புனித நீரை எடுத்துக் கொண்டு, உங்களுக்கு என்ன தேவையோ அதைக் கேட்க வேண்டும். அதைத் தொடர்ந்து, நீங்கள் தியானம் செய்யும் போது, ஈசனையும் நினைத்துக் கொள்ளவும். கையில் உள்ள நீரை, சிவலிங்கத்தின் மீது ஊற்றவும்.
‘ஓம் நம சிவாய’ என்று கூறிய படி, பஞ்சாமிர்தத்தை சிவலிங்கத்தின் மீது அபிஷேகம் செய்யவும். மீண்டும் தண்ணீர் ஊற்றி, அட்சதைத் தூவவும். பிறகு, ஆர்த்தி எடுக்க வில்வ இல்லை மற்றும் ஊதுபத்தியை ஏற்றி வைக்கவும். இனிப்புகளை காணிக்கையாக்கி, பாவங்கள் மற்றும் கர்மாவில் இருந்து விடுபட வேண்டுங்கள்.
The post ஆவணி மாத திங்கட்கிழமை விரதம் இருப்பதால் ஏற்படும் நன்மைகள்..!! appeared first on Dinakaran.