தமிழகத்தில் ஆட்டோக்களில் மீட்டர் கட்டணம் முறையாக வசூலிக்கபடவில்லை என தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. கடந்த ஆண்டு இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, பெட்ரோல் டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியது.
அத்துடன் சரியான ஆட்டோ கட்டணத்தை நிர்ணயம் செய்து முறையாக அவை வசூலிக்கபடுகிறதா என்பதை போக்குவரத்து துறை கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. அதன்பிறகு ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கபட்டிருந்தன. இதனை அடுத்து ஆட்டோ மீட்டர் கட்டணம் மறுநிர்ணயம் செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் போக்குவரத்து துறையின் சார்பில் சென்னை எழிலகத்தில் கடந்த அண்டு போக்குவரத்து துறை இணை ஆணையர் தலைமையில், தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்றது.
அப்போது புதிய மீட்டர் கட்டணத்தை வெளியிடவும், ஆட்டோக்களுக்கு பிரத்தியேக செயலியை வடிவமைக்க வேண்டும் எனவும், தனியார் செயலிகளுக்கு அரசு செயலி வடிவமைத்து நடத்த கூடிய பட்சாத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் எனவும் தொழிற்சங்கள் சார்பில் வலியுறுத்தபட்டது. அதன்படி ஆட்டோகளுக்கு தமிழ்நாடு அரசு தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ஒரு புதிய செயலியை உருவாக்குவது குறித்து போக்குவரத்து துறை கூடுதல் ஆணையர் தலைமையில் சென்னை கிண்டியில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள், ஆட்டோ உரிமையாளர் சங்கத்தினர் என பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
The post ஆட்டோக்களுக்கு அரசு சார்பில் செயலி உருவாக்குவது குறித்து போக்குவரத்து துறை கூடுதல் ஆணையர் தலைமையில் ஆலோசனை appeared first on Dinakaran.