சில்லி பாயின்ட்…

* தேசிய படகோட்டும் விளையாட்டுச் சங்கத்தின் சார்பில் படகோட்டும் விளையாட்டின் மேம்பாட்டுக்கு அளித்த பங்களிப்புக்காக தேசிய சங்கத்தின் துணைத் தலைவரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான அசோக் தாக்கருக்கு ‘அட்மிரல் கோஹ்லி’ விருது வழங்கப்பட்டுள்ளது.

* சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கில் இண்டியம் ஏஐடிஏ டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. தரவரிசை புள்ளிகளுக்கான இந்தப் போட்டியின் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டங்கள் இன்று மாலை நடைபெற உள்ளது.

* நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக சென்னை மாவட்டட கேரம் சங்கத்தின் நிர்வாகிகள் தேர்தல் ஆக.20ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இந்த தேர்தலில் சுமார் 60 பதிவு பெற்ற உறுப்பினர்கள், 680க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக உள்ளனர். வாக்குப்பதிவு சென்னை நேரு ஸ்டேடிய வளாகத்தில் உள்ள கேரம் அரங்கில் நடைபெறும். போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்று சனிக்கிழமை கடைசி நாள்.

* மாநிலங்களுக்கு இடையிலான ஜூனியர் வாலிபால் சாம்பியன்ஷிப் ஆக.12-15 வரை சேலத்தில் நடைபெற உள்ளது. இந்தப்போட்டிக்கான சென்னை மாவட்ட ஆண்கள், மகளிர் அணிகளை தேர்வு செய்வதற்கான முகாம் ஆக.7ம் தேதி நேரு அரங்கில் நடைபெற உள்ளது. ஜன.1, 2006 அல்லது அதற்கு பின் பிறந்த சிறுவர், சிறுமிகள் மட்டும் பங்கேற்கலாம். மேலும் தகவலறிய, பதிவு செய்ய: சென்னை மாவட்ட கைப்பந்துச் சங்க செயலர் கேசவன் 9841816778.

* ஆஸ்திரேலியா ஓபன் பேட்மின்டன் போட்டியில் அடுத்தடுத்து இந்திய வீராங்கனைகளை வீழ்த்தி மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறிய பி.வி.சிந்து, அதில் நேற்று அமெரிக்க வீராங்கனை பெல்வென் ஜாங்கிடம் 2-0 என நேர்செட்களில் தோல்வியை தழுவினார்.

* ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்திய வீரர் ராஜ்வத் பிரியன்சு (31வது ரேங்க்) 30 நிமிடங்களில் சக இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்தை (19வது ரேங்க்) 21-13, 21-8 என நேர் செட்களில் வென்று முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார். எச்.எஸ்.பிரணாய் (9வது ரேங்க்) ஒரு மணி 13 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தில் 16-21, 21-17, 21-14 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் அந்தோனி சினிசுகாவை (2வது ரேங்க்) வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Related Stories: