ஓசூர்: ஓசூரில் 3.5 கோடி மதிப்பு ஓசூர் வீட்டு வசதி வாரிய நிலத்தை முறைகேடாக பத்திர பதிவு செய்த உதவி வருவாய் அலுவலர் உட்பட ஏழு பேரை கைது செய்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின், கோகுல் நகர் பகுயில் உள்ள 16 வீட்டு வசதி வாரிய நிலத்தை முறைகேடாக பத்திர பதிவு செய்து நிலம் விற்பனை செய்த சம்பவத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவி வருவாய் அலுவலர் உட்பட 7 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான ஓசூர் கோகுல் நகர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 16 ல் நிலம் வாங்கி விற்பனை செய்து வந்தது, குலுக்கல் முறையில் விற்பனை நடைபெற்ற இந்த நிலத்தை போலியாக சில நபர்கள் ஆவணங்கள் தயாரித்து பத்திரம் செய்தது வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் பாஸ்கர் அவர்களுக்கு புகார் வந்தது, புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு பின் பாஸ்கர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் மாவட்ட கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி சரோஜ்குமார் அறிவுரைப்படி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ராஜா ரவி தங்கம் தலைமையில் ஆய்வாளர் சாவித்திரி உட்பட தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இது தொடர்பாக விசாரணையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய உதவி வருவாய் அலுவலர் ஆராவமுதுவை கைது செய்தனர். பின் தொடர் விசாரணையில் இதில் முக்கிய குற்றவாளிகள் மதி என்கிற மதியழகன் இவர் ஏற்கனவே ஈரோடு பகுதியில் ஈமு கோழி விற்பனையில் 10 வருடம் சிறை தண்டனை பெற்றவர் அவரையும் கைது செய்தனர், அவருடன் உடந்தையாக இருந்த ஓசூர் பகுதியை சேர்ந்த சதீஷ் ,டேனில், ஸ்ரீதர் , முருகதாஸ் ,ஆனந்த் ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 13 செல்போன் 62 ஏடிஎம் கார்டு, இரண்டு கார்களை பறிமுதல் செய்துள்ளனர். ஏழு பேரை கைது செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
The post ஓசூரில் 3.5 கோடி மதிப்புமிக்க வீட்டு வசதி வாரிய நிலத்தை முறைகேடாக பத்திர பதிவு செய்த உதவி வருவாய் அலுவலர் உட்பட 7 பேர் கைது appeared first on Dinakaran.