பிளாஸ்டிக் கவரில் முகத்தை மூடி நைட்ரஜன் வாயுவை சுவாசித்து உதவி பேராசிரியர் தற்கொலை

கோவை:கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேதாஜி புரத்தை சேர்ந்தவர் தனபிரபு (33). திருமணம் ஆகாதவர். கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றியதால், உப்பிலிபாளையம் பாரதி நகரில் வாடகை வீட்டில் தனியாக வசித்தார். நேற்று முன்தினம் இவர் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. பக்கத்து வீட்டில் வசித்தவர் எட்டி பார்த்தபோது தனபிரபு முகத்தில் பிளாஸ்டிக் கவரால் மூடி, மூக்கில் டியூப் மாட்டிய நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்து சிங்காநல்லூர் போலீசார் வந்து விசாரித்தனர். வீட்டில் 50 கிலோ எடையிலான நைட்ரஜன் சிலிண்டர் இருந்தது.

கல்லூரியில் வேதியியல் ஆய்வகத்தில் பயன்படுத்த இந்த சிலிண்டரை தனபிரபு வாங்கியிருந்தார். கல்லூரிக்கு இதை கொண்டு செல்லாமல் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். இதை டியூப் மூலமாக மாட்டி மூக்கில் பொருத்தினால் ஒரு சில நொடிகளில் உயிரிழப்பு ஏற்படும் என தெரிகிறது. பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடியுள்ளார். முன்னதாக டியூப்பின் ஒரு பகுதியை மூக்கிலும் இன்னொரு இணைப்பை சிலிண்டர் வால்வு பகுதியிலும் மாட்டி விட்டுள்ளார்.

பின்னர் சிலிண்டரில் நைட்ரஜன் வாயுவை திறந்துவிட்டு சுவாசித்ததால் மூச்சுத்திணறி இறந்து விட்டதாக தெரிகிறது. முன்னதாக தனபிரபு வீட்டின் மேஜை மீது ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், ‘‘நான் வாழ விரும்பவில்லை. எனக்கு வேலை பிடிக்கவில்லை, மன உளைச்சல் அதிகமாகி விட்டது. இனியும் இந்த உலகத்தில் வாழ விரும்பாமல் நான் சாக போகிறேன். என் சாவுக்கு யாரும் காரணமில்லை. அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள்’’ என எழுதியுள்ளார். தன பிரபு பங்கு சந்தையில் முதலீடு செய்து இழப்பு ஏற்பட்டதால் தற்கொலை செய்தாரா என விசாரணை நடக்கிறது.

The post பிளாஸ்டிக் கவரில் முகத்தை மூடி நைட்ரஜன் வாயுவை சுவாசித்து உதவி பேராசிரியர் தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: