கண்ணிவெடி வெடித்ததில் ராணுவ வீரருக்கு காயம்

ரஜோரி: ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் கண்ணிவெடியில் சிக்கி ராணுவ வீரர் காயமடைந்தார். ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டம் நவ்ஷோரா செக்டார் கல்சியன் கிராமத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே ரைபிள் படை வீரர் குரசரண் சிங் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை மிதித்துள்ளார். கண்ணிவெடி வெடித்து சிதறியதில் குருசரண் சிங் படுகாயமடைந்தார். ராணுவ மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை தரப்பட்டு, உதம்பூர் மருத்துவமனைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

The post கண்ணிவெடி வெடித்ததில் ராணுவ வீரருக்கு காயம் appeared first on Dinakaran.

Related Stories: