இதுவரை ஒரு வெற்றியை கூட பெறாத இந்த 2 அணிகளுக்கு இடையிலான இந்த ஆட்டத்தில் நேபாளம் அறிமுக அணி என்பதால் வெல்வதற்கான வாய்ப்பு குறைவு. அனுபவமற்ற அணியான நேபாளம் தோற்றாலும் அந்த அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை.இந்தியா வெல்வதற்கான வாய்ப்பு அதிகம் என்றாலும், வென்றாக வேண்டிய நெருக்கடி இந்தியாவுக்குதான். அந்த நிச்சயம் வெற்றியின் மூலம் இந்தியா 3 புள்ளிகளுடன் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறி விடும். அதே நேரத்தில் மழை குறுக்கிட்டு ஆட்டத்தை நிறுத்தினால் 2 புள்ளிகளுடன் ஏ பிரிவில் 2வது இடத்தை பிடித்து அடுத்த சுற்றுக்கு இந்தியா எளிதில் முன்னேறி விடும். அப்படி 2வது இடம் பிடித்தால் சூப்பர்-4 சுற்றில் முதல் ஆட்டத்தில் இந்தியா செப்.10ம் தேதி பாக் அணியை எதிர்கொள்ளும்.
கடைசியாக:
* இந்தியா அணி கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் ஆட்டங்களில் 2ல் அயர்லாந்தை வென்று இருக்கிறது. ஓரு ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசிடம் தோல்வியை சந்தித்துள்ளது. அயர்லாந்து, பாகிஸ்தான் உடனான எஞ்சிய 2 ஆட்டங்கள் மழை காரணமாக கைவிடப்பட்டன.
* நேபாளம் கடைசியாக விளையாடிய 4 சர்வதேச ஒருநாள் ஆட்டங்களிலும் ஐசிசியின் நிரந்தர உறுப்பு நாடுகளுடன்தான் விளையாடி இருக்கிறது. அந்த 4லும் ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, பாகிஸ்தான் நாடுகளிடம் தோல்வியை தான் சந்தித்துள்ளது.
நேருக்கு நேர்: இதுவரை இந்த 2 அணிகளும் சர்வதேச களத்தில் சந்தித்ததே இல்லை. இதுதான் முதல் சர்வதேச ஆட்டம். ஆசிய கோப்பையில் நேபாளம் முதல் முறையாக களம் இறங்கியுள்ளது.
The post ஆசிய கோப்பை கிரிக்கெட்; நேபாளம், மழை எதிர்த்தாலும் இந்தியாவுக்கு வெற்றி நிச்சயம் appeared first on Dinakaran.