×

அரும்பாக்கம் மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்து

அண்ணாநகர்: அரும்பாக்கம் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்து நடக்கிறது என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.சென்னை அரும்பாக்கம் மார்க்கெட் அருகே நடைபாதையை ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடைகள் இயங்கி வருவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவதிப்பட்டனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இது குறித்து அண்ணாநகர் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 8வது மண்டல அலுவலக அதிகாரிகளுக்கு பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சமூகநல ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டினர்.

அமைந்தகரை மார்க்கெட் அருகே உள்ள கூவம் ஆற்றில் அடிக்கடி தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி நடந்து வருகிறது. கூவம் ஆற்றின் மதில் சுவர் சிறியதாக உள்ளதால் அதில் ஏறி தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் மதில் சுவரை உயர்த்தவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூகநல ஆர்வலர்கள் கூறியதாவது;
அரும்பாக்கம் மார்க்கெட் அருகே உள்ள சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்து தள்ளுவண்டி கடைகள் நாளுக்குநாள் அதிகரித்துவருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு கடைகள் போடக்கூடாது என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிப்பு பலகை அமைத்துள்ளனர். அப்படியிருந்தும் நடைபாதையில் கடைகளை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரியிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.அமைந்தகரை மார்க்கெட் அருகே கூவம் ஆற்றில் தற்கொலை தடுக்க மதில் சுவர் உயரத்தை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

The post அரும்பாக்கம் மார்க்கெட்டில் ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்து appeared first on Dinakaran.

Tags : Arumbakkam market ,Annanagar ,Chennai ,Dinakaran ,
× RELATED 10 வயது சிறுமிக்கு டார்ச்சர்: 17 வயது சிறுவன் கைது