×

10 வயது சிறுமிக்கு டார்ச்சர்: 17 வயது சிறுவன் கைது

அண்ணாநகர்: சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த மாதம் 30ம்தேதி அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். இதன்படி, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கேட்டபோது அவர்களை போலீசார் எச்சரித்ததாக தெரிகிறது. இதையடுத்து கடந்த 7ம் தேதி நாளிதழில் செய்தி வெளியானதால் காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்து சிறுமியின் பெற்றோர் தாக்கப்படவில்லை என அறிக்கை வெளியிட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சரியான விசாரணை செய்யாமல் தாமதம் செய்துவந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சிறுமியின் வழக்கு தொடர்பாக இதுவரை குற்றவாளியை ஏன் செய்யவில்லை என்று உயரதிகாரிகள் கேள்வி எழுப்பியதால் உடனடியாக இதுசம்பந்தமாக 17 வயது சிறுவனை கைது செய்துள்ளனர். இதனிடையே இந்த வழக்கு கோயம்பேடு அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் உமாமகேஸ்வரி விசாரித்து வருகின்றார். இந்த வழக்கு தொடர்பாக ஒருவரை தேடி வருகின்றனர்.

The post 10 வயது சிறுமிக்கு டார்ச்சர்: 17 வயது சிறுவன் கைது appeared first on Dinakaran.

Tags : Annanagar ,All Women's Police Station ,Annanagar, Chennai ,
× RELATED அண்ணாநகரில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிஐக்கு மாற்றம்