அரிமளம் அருகே 38 ஜோடி மாட்டு வண்டிகள் எல்கை பந்தயம்

*பந்தய தூரத்தை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றது

திருமயம் : அரிமளம் அருகே நடைபெற்ற பிரம்மாண்டமான பந்தயத்தில் 38 ஜோடி மாட்டு வண்டிகள், 9 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள புதுநிலைப்பட்டி கண்ணுடைய அயயனார், குறுந்துடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு 10ம் ஆண்டு மாட்டுவண்டி, குதிரை வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் புதுக்கோட்டை திருச்சி, தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், தேனி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 38 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பந்தயமானது பெரிய மாடு, நடு மாடு, சிறிய மாடு என மூன்று பிரிவாக நடத்தப்பட்டது.

பெரிய மாடு பிரிவில் பந்தய தூரம் 8 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 7 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசு மாங்குளம் தேவேந்திரன், 2ம் பரிசு கே.புதுப்பட்டி கே ஏ அம்பாள், 3ம் பரிசு கே.புதுப்பட்டி கலை, 4ம் பரிசு பரளி சித்தார்த் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் வென்றன. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நடுமாடு பிரிவில் பந்தயத் தூரமானது 6 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 10 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

இதில் முதல் பரிசை விராமதி கருப்பையா, 2ம் பரிசு பரளி செல்வி, 3ம் பரிசு கொடிமங்கலம் திருப்பதி, 4ம் பரிசு புதுநிலைபட்டி சீமான் கண்ணன் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.இறுதியாக நடந்த சிறிய மாடு பிரிவில் பந்தய தூரம் 5 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 21 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை புதுநிலைப்பட்டி சீமான் கண்ணன், 2ம் பரிசு உறுதிகோட்டை கதிரேசன், 3ம் பரிசு கே.புதுப்பட்டி அம்பாள், 4ம் பரிசு அரிமளம் சேர்த்து மேல் செல்லைய்யனார் ஆகியோருக்கு சொந்தமான மாட்டு வண்டிகள் வென்றன.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நடுக்குதிரை வண்டிகளுக்கான பந்தயத்தில் 9 குதிரைகள் கலந்து கொண்டன. இதன் பந்தய தூரம் போய் வர 9 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இதில் முதல் பரிசை புதுநிலைப்பட்டி சீமான் கண்ணன், 2ம் பரிசு திருநாகேஸ்வரம் சுபிக் ஷா, 3ம் பரிசு குளித்தலை சங்கர் பாய்ஸ், 4ம் பரிசு அறந்தாங்கி முத்தமிழ் ஆகியோருக்கு சொந்தமான குதிரைகள் வென்றன.

இறுதியாக பந்தயத்தில் வெற்றி பெற்ற மாடு, குதிரை வண்டி உரிமையாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற புதுநிலைப்பட்டி- கல்லூர் சாலை இருபுறமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை புதுநிலைப்பட்டி ஊரார்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். கே.புதுப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

The post அரிமளம் அருகே 38 ஜோடி மாட்டு வண்டிகள் எல்கை பந்தயம் appeared first on Dinakaran.

Related Stories: