இதனால் நிகழ்ச்சிக்கு வந்த ஏராளமானோர் அரங்கத்தில் அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து அரங்கத்துக்கு வெளியே ரசிகர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையும் பணம் கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கியிருந்தனர். இதனால் கடும் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் பாதுகாப்பாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி சிலர் மயங்கி விழுந்தனர். இளம்பெண்கள் பலர் அழுதபடி காட்சியளித்தனர்.
இந்நிலையில் நிகழ்ச்சியை நடத்திய ஏசிடிசி நிறுவனர் ஹேமந்த் ராஜா வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டார். அதில், ‘இந்நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களது பணம் ரூ.500 ஆக இருந்தாலும் ரூ.50 ஆயிரமாக இருந்தாலும் அவை திருப்பி தரப்படும். நிகழ்ச்சியால் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.
The post ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி தர நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உறுதி appeared first on Dinakaran.