பி.ஆர்க். நுழைவுத்தேர்வுக்கு பிப்.1 முதல் விண்ணப்ப பதிவு: ஒன்றிய ஆர்க்கிடெக்சர் கவுன்சில் அறிவிப்பு

சென்னை: வரும் கல்வி ஆண்டுக்கான பி.ஆர்க். நுழைவுத்தேர்வுக்கு பிப்ரவரி 1ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஒன்றிய ஆர்க்கிடெக்சர் கவுன்சில் அறிவித்துள்ளது. பி.ஆர்க். எனப்படும் இளநிலை கட்டிடக்கலை படிப்பு ஐந்தாண்டு படிப்பாகும். இதில் சேர விரும்புவோர் நாட்டா நுழைவுத்தேர்வு எனப்படும் தேசிய கட்டிடக்கலை திறனறி தேர்வை எழுத வேண்டும். இத்தேர்வை மத்திய ஆர்க்கிடெக்சர் கவுன்சில் நடத்துகிறது. இந்நிலையில், வரும் கல்வி ஆண்டு (2024-25) பி.ஆர்க் நுழைவுத்தேர்வுக்கான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

இதுதொடர்பாக மத்திய ஆர்க்கிடெக்சர் கவுன்சில் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “2024-2025-ம் கல்வி ஆண்டுக்கான ‘நாட்டா’ நுழைவுத்தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட உள்ளது. இத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு வருகிற பிப்ரவரி 1ம் தேதி தொடங்குகிறது. நுழைவுத்தேர்வுக்கான கல்வித்தகுதி, பாடத்திட்டம், ஆன்லைன் விண்ணப்ப பதிவு முறை உள்ளிட்ட விவரங்களை www.nata.in மற்றும் www.coa.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்”. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post பி.ஆர்க். நுழைவுத்தேர்வுக்கு பிப்.1 முதல் விண்ணப்ப பதிவு: ஒன்றிய ஆர்க்கிடெக்சர் கவுன்சில் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: