இனிப்பு ஆப்பிள் – 2
சர்க்கரை – 2 டேபிள்ஸ்பூன்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
குங்குமப்பூ – சிறிதளவு
பாதாம், பிஸ்தா (துருவியது) – 2 டீஸ்பூன்
உலர்திராட்சை – 10
முந்திரி – 5
ஏலக்காய்த்தூள் – 2 சிட்டிகை.
செய்முறை
முதலில் ஆப்பிளாக எடுத்துக்கொண்டு அதன் தோலை சீவி துருவிக்கொள்ளவும். பாத்திரத்தில் இரண்டு டீஸ்பூன் நெய் சேர்த்துச் சூடானதும் ஆப்பிள் துருவலைச் சேர்த்து அடுப்பைக் குறைத்து பொன்னிறமாகும் வரை பொறுமையாக வதக்கவும். பிறகு சர்க்கரை, மீதமுள்ள நெய் சேர்த்து வதக்கி நன்கு திரண்டு வரும்போது பாதாம், பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ அனைத்தையும் சேர்த்துப் புரட்டிவிட்டு, இரண்டு நிமிடங்கள் அடுப்பைக் குறைத்து வைத்து இறக்கினால் சுவையான ஆப்பிள் அல்வா தயார்.
The post ஆப்பிள் அல்வா appeared first on Dinakaran.