லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வால் தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு ரூ.10 கோடி இழப்பு தவிர்ப்பு: பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தகவல்

சென்னை: லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு காரணமாக, நடப்பு நிதியாண்டில் தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு ஏற்பட இருந்த ரூ.10 கோடி அளவிலான இழப்பு தடுக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் விழிப்புணர்வு வரும் ஒவ்வொரு ஆண்டும் தெற்கு ரயில்வேயில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் தெற்கு ரயில்வே சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங், ஐஐடி இயக்குனர் காமகோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங் பேசியதாவது: லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிப்பது ஊழலைத் தடுப்பதிலும், பணியிடத்தில் தார்மீகக் கொள்கைகளை நிறுவுவதிலும் முக்கிய பங்காக உள்ளது. ட்ரோன் ஆய்வுகள், கூகுள் எர்த் ப்ரோ மென்பொருள், எச்எச்டி, சரக்கு செயல்பாடுகள் தகவல் அமைப்புகள் (FOIS) ஆகியவற்றுக்கான பிரத்யேக அணுகல் மூலம் பணியாளர்களைக் கண்காணிப்பது போன்ற அதிநவீன கருவிகளின் பயன்பாடு, லஞ்ச ஒழிப்பு துறையின் குறிப்பிடத்தக்க பங்கை எடுத்துக்காட்டுகிறது. தெற்கு ரயில்வேயின் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வால் நடப்பு நிதியாண்டில் 10 கோடி ரூபாய் இழப்பு தடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வால் தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு ரூ.10 கோடி இழப்பு தவிர்ப்பு: பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: