நேற்று ஒருவர், இன்று வேறொருவர், நாளை யாரோ…? உதயகுமாரை கலாய்த்த ஓபிஎஸ் மகன்

மதுரை: இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமாருக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், ‘‘முன்னாள் விளையாட்டு துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் அவர்களே.. நேற்று – அம்மா அவர்களின் மறு உருவம் தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள்.. இன்று – எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் மறு உருவம் எடப்பாடி பழனிசாமி… நாளை யாரோ? என்ன விளையாட்டு இது?’’ என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

மதுரை டி.குன்னத்தூரில் நிருபர்களிடம் நேற்று பேசிய உதயகுமாரிடம், ரவீந்திரநாத் பதிவு குறித்து கேள்வி கேட்டனர். இதற்கு டென்ஷனான உதயகுமார், ‘‘ரவிந்திரநாத்தா? அவர் யார் என எனக்கு தெரியாது. தெரிந்த பின்பு சொல்கிறேன். அவர் யார் என கூகுளில் தேடி பார்த்து சொல்கிறேன்.

இரட்டை இலையை எதிர்த்து பலாப்பழத்தில் நின்று போட்டியிட்டவர்கள் பேச என்ன தகுதியுள்ளது? காசு இருந்தால் தந்தையும் மகனும் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? இதனை ஒவ்வொரு தொண்டர்களும் கேட்டு செல்வார்களா? யோக்கியன் வருகிறார் செம்பை எடுத்து உள்ளே வையுங்கள் என்ற கதையாக உள்ளது’’ என கோபமாக தெரிவித்தார்.

The post நேற்று ஒருவர், இன்று வேறொருவர், நாளை யாரோ…? உதயகுமாரை கலாய்த்த ஓபிஎஸ் மகன் appeared first on Dinakaran.

Related Stories: