The post அண்ணா சிலைக்கு சசிகலா மரியாதை அதிமுகவினர் எதிர்ப்பு appeared first on Dinakaran.
அண்ணா சிலைக்கு சசிகலா மரியாதை அதிமுகவினர் எதிர்ப்பு

சென்னை: அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, சசிகலா நேற்று திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சசிகலாவின் ஆதரவாளர்கள் இப்பகுதியில் அதிமுக கட்சி கொடி, பேனர்கள் வைத்தனர். அந்த பேனர் மற்றும் கொடிகளை அகற்றக்கோரி அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம் மற்றும் பேரூர் செயலாளர் தினேஷ் குமார் தலைமையில் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் திருக்கழுக்குன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.