×

ஆன்ட்ராய்டு டிவி வழக்கு: சிசிஐக்கு ரூ.20.24கோடி செலுத்த கூகுள் ஒப்புதல்


புதுடெல்லி: ஆன்ட்ராய்டு டிவி துறையில் நியாயமற்ற நடைமுறைகள் தொடர்பான வழக்கில் இந்திய ஒழுங்குமுறை ஆணையத்துக்கு ரூ.20.24கோடி செலுத்துவதற்கு கூகுள் ஒப்புக்கொண்டுள்ளது. ஆன்ட்ராய்டு டிவி துறையில் கூகுள் நியாயமற்ற நடைமுறைகளை பின்பற்றுவதாக கடந்த 2021ம் ஆண்டு புகார் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்திய ஒழுங்குமுறை ஆணையம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் வழக்கை தீர்த்து வைக்குமாறு கூகுள் முன்மொழிந்தது. மேலும் இந்திய ஒழுங்குமுறை ஆணையத்தின் தீர்வு திட்டத்தை பரிசீலித்தது.

புதிய இந்தியா ஒப்பந்தத்தின்(New India agreement) கீழ் கூகுள் இந்தியாவில் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் டிவிகளுக்கான ப்ளே ஸ்டோர் மற்றும் ப்ளே சேவைகளுக்கான தனி உரிமத்தை முன்மொழிந்து ஒரு தீர்வு விண்ணப்பத்தை சமர்ப்பித்தது. இந்த தீர்வின் ஒரு பகுதியாக கூகுள் நிறுவனம் ரூ.20.24கோடி இறுதி தொகையை செலுத்துவதற்கு முன்வந்துள்ளது. இதனை இந்திய ஒழுங்குமுறை அங்கீகரித்துள்ளது.

The post ஆன்ட்ராய்டு டிவி வழக்கு: சிசிஐக்கு ரூ.20.24கோடி செலுத்த கூகுள் ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Google ,CCI ,New Delhi ,Regulatory Commission of India ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...