×

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் அம்மன் கோவில்கள் தரிசன சுற்றுலா: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்

சென்னை: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் கோயில்களை தரிசனம் செய்யும் வகையில் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை ஒரு நாள் ஆடி அம்மன் தொகுப்பு சிறப்பு சுற்றுலா அடுத்த மாதம் 18ம்தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை ஒரு மாதம் செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இதன்படி, சென்னை திருவல்லிகேணி சுற்றுலா வளாகத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு காளிகாம்பாள் கோவில், பாரிமுனை அங்காள பரமேஸ்வரி கோவில், ராயபுரம் வடிவுடையம்மன் கோவில், திருவொற்றியூர் பவானி அம்மன் கோவில், பெரியபாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், புட்லூர் திருவுடையம்மன் கோவில், திருமுல்லைவாயில் பச்சையம்மன் கோவில்,

திருமுல்லைவாயில் பாலியம்மன் கோவில், வில்லிவாக்கம் ஆகிய திருக்கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும். சுற்றுலாவிற்கான கட்டணம் ரூ.1000. இதுபோல் ஒரே நாளில் 10 அம்மன் கோவில்கள் சுற்றுலா உள்ளது. அது சென்னை திருவல்லிகேணி சுற்றுலா வளாகத்திலிருந்து காலை 8.30 மணிக்கு புறப்பட்டு கற்பகாம்பாள் கோவில், மயிலாப்பூர் முண்டகண்ணி அம்மன் கோவில், மயிலாப்பூர் கோலவிழியம்மன் கோவில், மயிலாப்பூர் ஆலயம்மன் கோவில், தேனாம்பேட்டை முப்பாத்தம்மன் கோவில், தி.நகர் பிடாரி இளங்காளி அம்மன் கோவில், சைதாப்பேட்டை அஷ்டலெஷ்மி கோவில், பெசன்ட் நகர் காமாட்சி அம்மன் கோவில், மாங்காடு தேவி கருமாரியம்மன் கோவில், திருவேற்காடு பாதாள பொன்னியம்மன் கோவில் ஆகிய கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும்வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும். கட்டணம் ரூ.800.

மதுரை ஆடி அம்மன் சுற்றுலாவில் மதுரை ஓட்டல் தமிழ்நாடு, அழகர் கோயில் சாலையிலிருந்து மீனாட்சி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், வண்டியூர் காளியம்மன் கோவில், மடப்புரம் வெட்டுடையார் காளியம்மன் கோவில், விட்டனேரி முத்து மாரியம்மன் கோவில், தாயமங்கலம் ராக்காயி அம்மன் கோவில், அழகர் கோவில் ஆகிய கோயில்களை தரிசனம் செய்து வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு, அனைத்து கோவில்களிலும் பிரசாதம் மற்றும் சிறப்பு விரைவு தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டணம் ரூ.1400. திருச்சி ஆடி அம்மன் சுற்றுலாவிற்கு, திருச்சிவெக்காளியம்மன் கோவில், உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில், உறையூர் அகிலாண்டேஸ்வரி கோவில், திருவானைக்காவல் மாரியம்மன் கோவில், சமயபுரம் உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில், சமயபுரம் மதுர காளியம்மன் கோவில், சிறுவாச்சூர் பொன்னேஸ்வரி அம்மன் கோவில், பொன்மலை உக்கிர காளியம்மன் கோவில், திருச்சி ஆகிய கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும். கட்டணம் ரூ.1100.

தஞ்சாவூர் ஆடி அம்மன் சுற்றுலாவில், வராகி அம்மன் (பெரிய கோவில்) கோவில், தஞ்சாவூர் பங்காரு காமாட்சி அம்மன் கோவில், தஞ்சாவூர் மகா மாரியம்மன் கோவில், புன்னைநல்லூர் கற்பரட்சாம்பிகை கோவில், திருக்கருகாவூர் துர்கை அம்மன் கோவில், பட்டீஸ்வரம் பாடைகட்டி மகா மாரியம்மன் கோவில், வலங்கைமான் நாகநாதசுவாமி கிரிகுஜாம்பிகை கோவில், திருநாகேஸ்வரம் காசி விஸ்வநாதர் விசாலாட்சி கோவில், மகாமக குளம், கும்பகோணம் ஐராவதேசுவரர் (பெரியநாயகி அம்மன்)கோவில், தாராசுரம் ஆகிய கோயில்களை கண்டு தரிசனம் செய்து வரும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவில் பயணிக்கும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படும்.

இச்சுற்றுலாவிற்கான கட்டணம் ரூ.1400. அம்மன் கோவில்களை ஆன்மீக சுற்றுலாப் பயணிகள் தரிசிக்கும் பொருட்டு 5 நாட்கள் 108 அம்மன் கோவில்கள் சுற்றுலாவுக்கும் ஆடி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் இராமேஸ்வரம் (ஆடி அமாவாசை) சுற்றுலாவிற்கும் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட சுற்றுலாக்களுக்கு http://www.ttdconline.com என்ற இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். விவரங்களுக்கு 180042531111, 044-25333333, 044-25333444 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் அம்மன் கோவில்கள் தரிசன சுற்றுலா: அமைச்சர் ராஜேந்திரன் தகவல் appeared first on Dinakaran.

Tags : AMMAN TEMPLES ,TAMIL NADU TOURISM DEVELOPMENT CORPORATION ,MINISTER ,RAJENDRAN ,Chennai ,Tourism Minister ,Madurai ,Trichy ,Thanjavur ,Amman Temples Vision Tourism ,
× RELATED தவெக-அதிமுக கூட்டணி அமையுமா? செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி