- டிவிபி-ஏஐஏடிஎம்கே
- செங்கோட்டையன்
- ஈரோடு
- டிவிபி மாநில நிர்வாகக் குழு
- தலைமை ஒருங்கிணைப்பாளர்
- கொங்கு பிராந்திய அமைப்பு
- பெருந்துறை
- டிவிபி
- விஜய்
ஈரோடு: தவெக-அதிமுக கூட்டணி அமையுமா? என்பது குறித்த கேள்விக்கு செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.தவெக மாநில நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு மண்டல அமைப்பு செயலாளருமான செங்கோட்டையன் பெருந்துறையில் இன்று அளித்த பேட்டி:
தவெக தலைவர் விஜய் வரும் 18ம் தேதி பெருந்துறையில் வாகன பிரசாரம் மேற்கொள்கிறார். அன்று காலை 11 மணியிலிருந்து 1 மணிக்குள் அவர் பேச உள்ளார். தவெகவில் விருப்ப மனு பெறும் தேதி குறித்து தலைவர் விஜய் அறிவிப்பார். அதன் பிறகு வேட்பாளர் பட்டியலை விஜய் வெளியிடுவார் என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் சசிகலாவை இணைப்பதற்காக நடைபெறும் பேச்சுவார்த்தை குறித்த கேள்விக்கு, ‘‘அதை அவர்களிடம் தான் கேட்கவேண்டும். தேர்தல் களம் எவ்வாறு செல்லும் என்பதை எவராலும் கணிக்க முடியாது. பொறுத்திருந்து பார்க்க வேண்டும்’’ என்றார். தவெக-அதிமுக கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்கு, ‘‘அதை நீங்கள் (பத்திரிகையாளர்கள்) தான் சொல்ல வேண்டும். தவெகவிற்கு போட்டி என்று யாரையும் சொல்லவில்லை.
தனிப்பட்ட முறையில் யார் போட்டி என கருத்து சொல்ல முடியாது. தவெகவிற்கு மக்கள் சக்தி உள்ளது’’, என்றார். இதற்கிடையே வரும் 18ம் தேதி பெருந்துறை அடுத்த சரளை பகுதியில் தவெக தலைவர் விஜய் வாகன பிரசாரம் மேற்கொள்ள போலீசார் இதுவரை அனுமதியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
