×

அமெரிக்காவில் வெள்ளம் 27 பேர் பலி, 20 சிறுமிகள் மாயம்

வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 27 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 சிறுமிகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு மாயமாகி உள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழை பெய்தது. மத்திய கெர் கவுன்டியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் கனமழை நீடித்தது. பல மணி நேரம் நீடித்த கனமழை காரணமாக குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நகரின் பல்வேறு பகுதிகளிலும் மழை, வெள்ளத்தில் சிக்கி மொத்தம் 27பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் மூலமாக 167 பேர் உட்பட மொத்தம் 237 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதனிடையே ஆற்றின் அருகே முகாமிட்டுள்ள சிறுமிகள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். முகாம் முற்றிலுமாக அடித்துச்செல்லப்பட்டதில் 20 சிறுமிகள் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இறந்தவர்கள் யார் என அடையாளம் காணும் பணியையும் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

The post அமெரிக்காவில் வெள்ளம் 27 பேர் பலி, 20 சிறுமிகள் மாயம் appeared first on Dinakaran.

Tags : Floods ,States ,Washington ,Texas, USA ,US ,Texas ,Kerr County ,United States ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலிய கடற்கரை தாக்குதல் பலி 16 ஆக...