சென்னை மாநகராட்சியில் அனுமதி பெறாமல் ஆபத்தான முறையில் பொது இடத்தில் அமைக்கப்பட்ட மேற்படிகொடி கம்பத்தை சென்னை பெருநகர மாநகராட்சியினரும், போலீசாரும் அகற்ற முடிவு செய்து அதனை பிஜேபி கட்சியினருக்கு தெரியபடுத்தி இரவு 8 மணிக்கு போலீசார் உதவியுடன் கொடிக்கம்பத்தை அகற்ற முற்படும் போது பிஜேபி துணைத் தலைவர் கரு.நாகராஜன் தலைமையில் சுமார் 110 பேர் அரசுக்கு எதிராக கோஷமிட்டு தர்ணா செய்தவர்களை பலமுறை எச்சரித்தும் கேளாமல் தொடர்ந்து அரசு அலுவலர்களிடம் தகராறு செய்துகொண்டிருந்தவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது T20 கானத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அதே நேரத்தில் மாநகராட்சி அதிகாரிகள் கொடிக்கம்பத்தை அகற்ற கொண்டு வந்த JCB இயந்திரத்தை கற்களை கொண்டு தாக்கி கண்ணாடிகளை உடைத்து பொது சொத்துக்கு சேதம் விளைவித்த 6 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கொடிக்கம்பத்தை அகற்றிய ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியை கற்களை வீசி சேதப்படுத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர் பிரசாத் ரெட்டியை காவல்துறை கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியது. அமர் பிரசாத் ரெட்டிக்கு நவ.3 வரை நீதிமன்ற காவல் விதித்து தாம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post சென்னை பனையூரில் பாஜக கொடிக்கம்பம் நட்ட விவகாரத்தில் கைதான அமர் பிரசாத் ரெட்டிக்கு நவ.3 வரை நீதிமன்ற காவல்: தாம்பரம் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.