அரசு நடுநிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு

ஊத்துக்கோட்டை: அரசு நடுநிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியத்தில் அனந்தேரி கிராமம் உள்ளது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு தலைமை ஆசிரியர் உட்பட 6 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த அரசுப்பள்ளியில் நல்ல முறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதால் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையும் கூடுதலாகவே உள்ளது. இதனால் கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் 2023-24ம் ஆண்டிற்கான குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் மூலம் ரூ.28 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி அனந்தேரி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் 2 வகுப்பறைகள் கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அனந்தேரி நடுநிலைப்பள்ளி வளாகத்தைச் சுற்றி காம்பவுண்டு சுவர் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் தினகரன் நாளிதழில் கடந்த 17ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து சுற்றுச்சுவர் கட்ட ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அந்தப் பணி விரைவில் பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post அரசு நடுநிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: