இதற்கெல்லாம் கட்டணம் செலுத்தவேண்டும்!

நன்றி குங்குமம் தோழி

*நீங்கள் வைத்திருக்கும் டெபிட் கார்டுக்கு ஆண்டுக்கு சேவை கட்டணமாக 125 ரூபாய் முதல் 750 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது.

*டெபிட் கார்டை தொலைத்து விட்டு புது கார்டு வாங்கினால் அதற்கும் சேவை கட்டணம் உண்டு. 150 முதல் 300 ரூபாய் வரை.

*இணையதளம் மூலம் நெட்பேங்கில் இருந்து ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு பணம் அனுப்பினால் ஒரு பரிமாற்றத்துக்கு 5-ரூபாய் முதல் 50 ரூபாய் வரை வசூல் செய்கிறார்கள்.

*நீங்கள் யாருக்காவது கொடுத்த செக் கலெக்‌ஷனுக்கு வரும் போது பணம் எடுக்காமல் நிறுத்தி வைக்க சொன்னால் அதற்கும் கட்டணம் உண்டு.

*ஒவ்வொரு வகை கணக்கிலும் குறைந்த பட்சம் இவ்வளவு தொகை இருக்க வேண்டும் என்ற வரையறை உண்டு. இந்த அளவுக்கு மினிமம் பேலன்ஸ் வைக்காதவர்களுக்கு 500 ரூபாய் வரை அபராதம் உண்டு. பென்ஷன் கணக்கு மற்றும் முதியோருக்கு இதில் விதி விலக்கு உண்டு.

*மொபைல் போனுக்கு வங்கிக் கணக்கு தொடர்பான அலெர்ட்களை அனுப்புவதற்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்கிறார்கள். சில வங்கிகள் மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும், சில வங்கிகள் ஆண்டுக்கு ஒரு முறையும் வசூலிக்கின்றனர்.

*இரண்டு பேர் சேர்ந்து வங்கிக் கணக்கு ஆரம்பிக்கிறீர்கள், அதிலிருந்து ஒருவர் பெயரை நீக்க வேண்டும் என்றாலும் கட்டணம் உண்டு. ஏற்கனவே நாமினேட் செய்த வாரிசுதாரரை மாற்றி வேறு ஒருவரை நாமினேஷன் செய்வதற்கும் கட்டணம் உண்டு.

*ஒரு கணக்குக்கு இவ்வளவு செக்குகள் தான் தரலாம் எனச் சில வங்கிகள் வரையறை வைத்திருக்கின்றன. அதற்கு மேல் உங்களுக்கு செக் புத்தகம் தேவைப்
பட்டால் அதற்கும் கட்டணம் உண்டு.

*நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் டிமாண்ட் டிராஃப்ட் எடுத்தாலும் கட்டணம் வசூலிக்கப்படும்.

*சில வங்கிகள் கணக்கு ஆரம்பித்து ஒரு வருடத்துக்குள் கணக்கை மூடினால் அதற்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள்.

*நம் வங்கிக் கணக்கு வரவு செலவு விபரம் பெறவும் (account Statement) கட்டணம் செலுத்த வேண்டும்.

*ATM கார்டை குறிப்பிட்ட தடவைக்கு மேல் பயன்படுத்தினால் ஒரு முறைக்கு 21 ரூபாய் வரை கட்டணம் உண்டு.

*தேவையற்ற கட்டணங்களை தவிர்க்க குறைந்தபட்ச தொகையை கவனமாக இருப்பு வையுங்கள். செக் புக்கை அளவோடு பயன்படுத்துங்கள். அவ்வப்போது பாஸ்புக்கை என்ட்ரி போட்டு அதில் ஏதேனும் கூடுதல் கட்டணம் பிடித்திருந்தால் உடனே வங்கி மேலாளரிடம் புகார் தெரிவியுங்கள். வங்கிக் கணக்கை தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் போதும்.

*உங்கள் வங்கிக் கணக்கில் வங்கிக்கு சென்று பணம் கட்டினால் கட்டணம் இல்லை. ஆனால் கேஷ் டெபாசிட் இயந்திரம் மூலம் பணம் கட்டினால் குறிப்பிட்ட தடவைக்கு மேல் தாண்டினால்
கட்டணம் உண்டு.

– பி.பரத், சிதம்பரம்.

The post இதற்கெல்லாம் கட்டணம் செலுத்தவேண்டும்! appeared first on Dinakaran.

Related Stories: