காவிரி, மகதாயி நதிநீர் பிரச்னை குறித்து கர்நாடகாவில் இன்று அனைத்து கட்சி கூட்டம்

பெங்களூரு: காவிரி, மகதாயி உள்ளிட்ட நீர் பிரச்னை குறித்தும் அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அமைச்சர் செலுவராயசாமி கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது, ‘கடந்த இரண்டு மாதமாக காவிரி நீர் திறந்து விட வேண்டும் என தமிழ்நாடு கோரிக்கை விடுத்துள்ளது. நீதிமன்ற உத்தரவின் பேரில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது 10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. ஆனால், காவிரி நீர் விஷயத்தில் மஜத மற்றும் பாஜவினர் அரசியல் லாபத்திற்காக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மழை குறைவாக பெய்துள்ளது. எனவே, அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளது. இது போன்ற சூழ்நிலையில் காவிரி பிரச்னை மட்டும் இன்றி மகதாயி பிரச்னை குறித்தும் விவாதிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டம் இன்று நடக்கிறது. விதான சவுதாவில் காலை 11 மணி அளவில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ்பொம்மை, குமாரசாமி உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தற்போதைய நிலவரம், அடுத்து எடுக்க வேண்டிய நிலை குறித்து ஆலோசிக்கப்படும்’ என்றார்.

The post காவிரி, மகதாயி நதிநீர் பிரச்னை குறித்து கர்நாடகாவில் இன்று அனைத்து கட்சி கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: