இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: சமீபத்தில் மத்தியபிரதேச மாநிலத்தை சார்ந்த கம்பெனிக்கு கும்மிடிப்பூண்டியில் மது தொழிற்சாலை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த கம்பெனியின் பீர் வகைகளை கொள்முதல் செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. நவ.10ம் தேதிக்கு பிறகு ஹன்டர், உட்பெக்கர், பவர் கூல் உள்ளிட்ட புதிய ரக பீர்கள் விற்பனைக்கு வர உள்ளது. இதே போல் பிற மாநிலங்களில் இருந்தும் விதவிதமான ரகங்களில் பீர் வகைகள் வாங்கி டிசம்பர் மாதத்தில் இருந்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் டாஸ்மாக் கடைகளில் 100 சதவீதம் பார்லி சார்ந்த பீர் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது 4 சதவீதம் ஆல்கஹால் கொண்ட பீர் வகைகளை வாங்கி விற்கவும் ஏற்பாடு நடந்து வருகிறது. வெளிமாநில பீர் வகைகளை விற்பனை செய்ய ஏதுவாக அந்தந்த கம்பெனியினர் ‘கூலிங் பிரிட்ஜ்’ வழங்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழகத்தில் தயாரிக்கும் பீர் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால் இப்போது வெளிமாநிலத்தில் தயாரிக்கப்படும் பீர் வகைககளை வாங்கவும் டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post குறைவான ஆல்கஹால் அளவு உள்ளிட்ட புதிய வகை பீர் ரகங்களை அறிமுகப்படுத்த திட்டம்: டாஸ்மாக் அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.