பணி ஆணைக்காக காத்திருந்தபோது, மாநகராட்சி ஆணையர் சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளதால் உடனடியாக பணிகளை மேற்கொள்ளுமாறு மண்டலம் 1 உதவி ஆணையரும், அப்போதைய துணைமேயர் திரவியமும் (அதிமுக) கூறினர். இதன்படி நான் பணிகளை மேற்கொண்டேன். ஆனால், பணிகள் முடிந்ததும், மேற்கொண்ட பணிக்குரிய பணம் எனக்கு வழங்கப்படவில்லை. எனவே, பணத்தை வழங்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மாநகராட்சி தரப்பில் மனுதாரர் ஏற்கனவே 93வது வார்டில் முறையாக பணிகள் மேற்கொள்ளவில்லை என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ‘‘சட்டமன்ற தேர்தல் தொடர்பான பணிகளால் பணி ஆணை வழங்கப்படவில்லை. அதே நேரம் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் முடிந்துள்ளதை அப்போதைய துணைமேயரின் கடிதம் தெளிவாக காட்டுகிறது. இந்த விவகாரத்தில் மாநகராட்சியின் நடவடிக்கை முரண்பாடாக உள்ளது. எப்போது தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானதோ, அப்போது முதல் எந்தப் பணிக்கும், பணி ஆணை வழங்கக் கூடாது. தேர்தலின்போது முறையாக டெண்டர் வழங்கப்பட்டதா எனத் தெரியவில்லை. எனவே, இந்த டெண்டர் விவகாரம் குறித்து மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி விசாரித்து 3 மாதத்தில் இந்த நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.
The post அதிமுக ஆட்சியில் சாலை போடாமல் மதுரை துணை மேயர் முறைகேடு? முரண்பாடு உள்ளதால் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.