The post அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது சரமாரி கல்வீச்சு appeared first on Dinakaran.
அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது சரமாரி கல்வீச்சு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமை வகித்தார். சாலையை ஆக்கிரமித்து மேடை அமைக்கப்பட்டிருந்ததால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேடையில் சி.வி.சண்முகம் பேசிக் கொண்டிருந்த போது எதிரே புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திலிருந்து சிலர் மேடையை நோக்கி சரமாரியாக கல் வீசியுள்ளனர். இதனால் பேச்சை நிறுத்திய சி.வி.சண்முகம், பின்னர் டென்ஷனாகி பேசினார். உடனடியாக மேற்கு காவல் நிலைய போலீசார் எதிரே புதிய கட்டிட வேலையில் ஈடுபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், கட்டிட வேலையில்தான் சில கற்கள் கீழே விழுந்துள்ளது என கூறியுள்ளனர்.