திருச்சி: திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழர்களான நயினார் நாகேந்திரன், தமிழிசை உள்ளிட்டோருக்கு இணை அமைச்சர் பதவி வழங்காமல் எல்.முருகனுக்கு பதவி வழங்கியது ஏன்? தமிழர்கள் எல்லா இடங்களிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தற்குறி என்று பாஜ தலைவர் அண்ணாமலை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அவர், அண்ணாமலை போல கட்சிக்கு தலைவராக வில்லை. அடிப்படை உறுப்பினர்களில் இருந்து வந்தவர். அதிமுக, நாம் தமிழர் கூட்டணி என்பது வெறும் புரளி பேச்சு. சட்டமன்ற தேர்தலில் நாங்கள் தனித்து தான் போட்டியிட முடிவு செய்துள்ளோம். இதுவரை 50,60 தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து விட்டோம். 117 தொகுதிகளில் ஆண்களையும், 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post அதிமுகவுடன் கூட்டணியா? வெறும் புரளி சீமான் பேட்டி appeared first on Dinakaran.