31ம்தேதி மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சிதம்பரம் பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். ஏப்.1ம் தேதி மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை பெரம்பலூர் புதுக்கோட்டை திருச்சி பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். 2ம் தேதி மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை திருவண்ணாமலை வேலூர் அரக்கோணம் பகுதிகளிலும், 3,4ம் தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை திருவள்ளூர் (தனி), காஞ்சிபுரம், பெரும்புதூர் பகுதிகளிலும் பிரசாரம் செய்கிறார். 5,6ம் தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். 7,8ம் தேதிகளில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை கடலூர் பகுதியில் பிரசாரம் செய்கிறார்.
9,10ம் தேதிகளில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். 11ம் தேதி மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி தூத்துக்குடி பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார். 12ம் தேதி மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், பகுதிகளில் பரப்புரை செய்கிறார். 13ம் தேதி மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை கரூர், நாமக்கல், தேனி பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை (17ம் தேதி 6 மணி வரை) மதுரை, தென்காசி, விருதுநகர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார்.
The post அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரேமலதா நாளை மறுநாள் பிரசாரம் தொடங்குகிறார்: ஏப்.17ம் தேதி நிறைவு செய்கிறார் appeared first on Dinakaran.