சென்னை: விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று நடைபெறவிருந்த பாமக மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி என்பது குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட இருந்தது. பெரும்பாலான பாமக நிர்வாகிகள் அதிமுகவுடனான கூட்டணியை விரும்பி வந்த நிலையில், பாஜக பக்கம் பாமக செல்லும் சூழலால் பரபரப்பு நிலவி வருகிறது.
The post பாமக ஆலோசனை கூட்டம் திடீர் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.