இந்த நிலையில், ஆதாருடன் இணைக்காத 11.5 கோடி பான் கார்டுகள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் ஆதாருடன் இணைக்காத பான் கார்டுகளை முடக்கி ஒன்றிய நேரடி வரி விதிப்பு வாரியம் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பதில் அளித்துள்ள ஒன்றிய நேரடி வரி விதிப்பு வாரியம், ஆதாருடன் பான் கார்டுகளை இணைக்க கால அவகாசம் அளிக்கப்பட்டதாக கூறியுள்ளது. பான்-ஆதார் இணைப்புக்கான கெடு 2023, ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 57.25 கோடி பேர் பான் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளன என்றும் காலக்கெடுவை பல முறை நீட்டித்தும், பான் கார்டுகளை ஆதாருடன் இணைக்காத 11.50 கோடி பான் கார்டுகள் முடக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் இந்த பான் கார்டுகளை நிரந்தரமாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
The post உங்களுடைய PAN card ஆக்டிவாக இருக்கிறதா?… ஆதாருடன் இணைக்காத 11.5 கோடி பான் கார்டுகள் முடக்கப்பட்டதாக அறிவிப்பு! appeared first on Dinakaran.