சாங்கி நிறுவனத்தை வாங்க முயன்ற ஸ்ரீ சிமெண்ட் நிறுவனத்தின் மீது அண்மையில் ஒன்றிய அமைப்புகளின் சோதனை நடைபெற்றதாகவும் அதைத் தொடர்ந்து சாங்கி நிறுவனத்தை அதானி குழுமத்தைச் சேர்ந்த அம்புஜா சிமெண்ட்ஸ் கையகப்படுத்தியுள்ளது என்றும் ஜெய்ராம் ரமேஷ் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தியாவில 3வது மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான ஸ்ரீ சிமெண்ட் சாங்கி நிறுவனத்தை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கடந்த ஏப்ரலில் தகவல் வெளியானது. இதையடுத்து ஸ்ரீ சிமெண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சார்பில் கடந்த ஜூனில் சோதனை நடத்தப்பட்டது. இதனால் சாங்கி நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக ஸ்ரீ சிமெண்ட் கடந்த மாதம் அறிவித்த நிலையில், கடந்த 3ம் தேதி அதானி குழுமனத்தின் அம்புஜா சிமெண்ட் சாங்கி நிறுவனத்தை கையகப்படுத்தியது.
The post அதானி நிறுவனத்துடன் போட்டியிடும் நிறுவனங்களுக்கு சிபிஐ, அமலாக்கத்துறையை அனுப்பி ஒன்றிய அரசு அச்சுறுத்தல் : காங்கிரஸ் பாய்ச்சல் appeared first on Dinakaran.