தஞ்சாவூர், நவ. 15: பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்யும் பொருட்டு வரும் 22ம் தேதி பேராவூரணியில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,1969ம் ஆண்டு முதல் தமிழகத்தில் “மக்கள் நேர்காணல் முகாம்” என்ற திட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் 2-வது புதன்கிழமை நடைபெற்று வந்தது.இதை தொடர்ந்து “ மக்கள் நேர்காணல் முகாம்” தொடர்ந்து நடத்திட அரசாணை (நிலை) எண். 378 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாகப் பிரிவு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, வரும் 22ம் தேதி புதன்கிழமை) பேராவூரணி வட்டம், ஆவணம் சரகம், செங்கமலம் கிராமத்தில் “மக்கள் நேர்காணல் முகாம்” நடத்திட தஞ்சாவூர், மாவட்ட கலெக்டர் ஆணையிட்டுள்ளார். எனவே “மக்கள் நேர்காணல் முகாமில்” பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வு பெற்று கொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
The post மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய நவ.22ல் மக்கள் நேர்காணல் முகாம் appeared first on Dinakaran.