இந்நிலையில், அதானி பற்றிய கேள்வி தனிப்பட்ட விவகாரம் அல்ல; அது தேசிய விவகாரம் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக தனது தொகுதிக்கு உட்பட்ட லால்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது; அதானி பற்றிய கேள்வி தனிப்பட்ட விவகாரம் அல்ல. அது தேசிய விவகாரம். அமெரிக்காவில் அதானி மீது ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால் அது ஒரு தனிப்பட்ட விஷயம் என்றும், நாங்கள் அதைப் பற்றி விவாதிப்பதில்லை என்றும் பிரதமர் மோடி கூறுகிறார். இந்தியாவின் பிரதமராக இருப்பவர், இந்த விஷயத்தைப் பற்றி டிரம்ப்பிடம் கேட்டிருக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து விசாரித்து, தேவைப்பட்டால் அதானியை அமெரிக்காவிற்கு விசாரணைக்கு அனுப்புவதாக கூறியிருக்க வேண்டும். ஆனால் இது தனிப்பட்ட விஷயம் என்று மோடி கூறியுள்ளார். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
The post அதானி பற்றிய கேள்வி தனிப்பட்ட விவகாரம் அல்ல; அது தேசிய விவகாரம்: ராகுல் காந்தி விமர்சனம்! appeared first on Dinakaran.