×

நடிகர் விஜய் இனி யாரை அழைப்பாரோ..? தமிழிசை கலாய்

தூத்துக்குடி: தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இன்று காலை சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு பா.ஜ. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமானத்தில் வந்தார். வாகைக்குளம் விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
மகாராஷ்டிராவை பொருத்தவரை நல்லாட்சிக்கும், நல்ல வளர்ச்சிக்கும் மக்கள் ஆதரவு கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு தேர்தல் எங்களுக்கு சாதகமாக இருக்கும். பாஜவை பொருத்தவரை ஊழல் என்ற பேச்சுக்கு இடமில்லை. அதானி மீதான ஊழல் விவகாரத்தில் பிரதமர் குற்றமற்றவர் என்று நிரூபிப்பார். நடிகர் விஜய் விவசாயிகளை அழைத்துள்ளார். இனி யாரையெல்லாம் கூப்பிடுகிறார் என்று பார்க்கலாம். இது உண்மையா அல்லது சூட்டிங்கா என்று பார்த்துக் கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post நடிகர் விஜய் இனி யாரை அழைப்பாரோ..? தமிழிசை கலாய் appeared first on Dinakaran.

Tags : Vijay ,Thoothukudi ,Chennai ,Nella ,J. Former ,president ,Tamilyasai Soundararajan ,Vaqikulam Airport ,Maharashtra ,Tamil Nadu ,
× RELATED போதை மறுவாழ்வு மையத்தில் ஆட்டோ ஓட்டுநர் பலி: ஊழியர்களிடம், போலீஸ் விசாரணை