தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை கமாலினிக்கு ஐசிசி அணியில் 4வது இடம் தரப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த அரை இறுதியில் 50 பந்துகளில் 56 ரன் குவித்து வெற்றிக்கு வித்திட்டவர் கமாலினி. தவிர, ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அரை சதம் விளாசியுள்ளார். ஐசிசி அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வீராங்கனை ஆயுஷி சுக்லா, உலகக் கோப்பை போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்.
இவரது சராசரி ரன் அளிப்பு 5.71. சிக்கன பந்து வீச்சு சராசரி 3.01. சிறந்த பந்து வீச்சாக, ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 8 ரன் தந்து 4 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மற்றொரு பந்து வீச்சாளர் வைஷ்ணவி சர்மா, 17 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவரது சராசரி ரன் அளிப்பு 4.35. சிக்கன பந்து வீச்சு சராசரி 3.36. சிறந்த பந்து வீச்சாக மலேசியாவுக்கு எதிரான போட்டியில் 5 ரன் தந்து 5 விக்கெட் வீழ்த்தினார். அதில் ஹாட்ரிக் விக்கெட்டுகளும் அடக்கம்.
The post அதிரடி… சரவெடி… அணியில் இடம்பிடி! appeared first on Dinakaran.