வெளிநாடுகளில் உள்ள இந்தியாவின் பழங்கால சிலைகளை எம்லாட் முறைப்படி கொண்டுவர நடவடிக்கை

சென்னை: வெளிநாடுகளில் உள்ள இந்தியாவின் பழங்கால சிலைகளை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் தற்போது எம்லாட் முறையில் இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வெளிநாடு கடத்தப்பட்ட சிலைகளை பரஸ்பர ஒப்பந்த முறையில் மீட்க சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிரடி தனிப்படை அறிவிக்கப்பட்டது.

தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட 35 பழங்கால சிலைகளை வெளிநாடுகளில் இருப்பதை தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கண்டறிந்து அதை மீட்கும் நடவடிக்கையில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த சிலைகளை வைத்து நடவடிக்கையானது எம்லாட் ஒப்பந்த முறைப்படி வெளிநாடுகளில் இருந்து சிலைகளை மீட்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கடந்த சில வருடங்களாக தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட பழங்கால சிலைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த சிறப்பு அதிரடி படையானது வெளிநாடுகளில் உள்ள சிலைகளை கண்டறிந்து அதை தமிழகத்திற்கு கொண்டுவர நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

இந்த தனிப்படையானது கடந்த மூன்று மாதங்களில் மட்டும் தமிழக கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள் 35க்கும் மேற்பட்ட சிலைகள் வெளிநாடுகளில் இருப்பதை கண்டறிந்து அதை எம்லாட் ஒப்பந்த முறைப்படி இந்தியாக்கு கொண்டு வர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். சிங்கப்பூரில் சோமாஸ் சுந்தர், நடன சம்பந்தர், கருடன் உள்ளிட்ட 16 இந்திய பழங்கால சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சிறப்பு அதிரடி தனிப்படை வெளிநாடுகளில் சிங்கப்பூரில் 16 சிலைகளும், அமெரிக்காவில் 8 சிலைகளும், ஆஸ்திரேலியாவில் 7 சிலைகளும், ஜெர்மணியில் 2 பழங்கால சிலைகள் இருப்பதை கண்டறிந்து அதை இந்தியாவுக்கு கொண்டுவர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post வெளிநாடுகளில் உள்ள இந்தியாவின் பழங்கால சிலைகளை எம்லாட் முறைப்படி கொண்டுவர நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: