ரேணுகா பரமேஸ்வரி மாரியம்மன் கோயிலில் அபிராமி பட்டர் முழு நிலவு காட்சி விழா: திரளான பக்தர்கள் தரிசனம்


மதுராந்தகம்: மதுராந்தகம் ரேணுகா பரமேஸ்வரி மாரியம்மன் கோயிலில் தை அமாவாசை தினத்தில் அபிராமி பட்டர் முழு நிலவு காட்சி விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ரேணுகா பரமேஸ்வரி மாரியம்மன் கோயிலில் 22ம் ஆண்டு தை அமாவாசை அபிராமி பட்டர் முழு நிலவு கட்சி விழா நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடைபெற்றது. விழாவையொட்டி கோயில் முழுவதும் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. காலை 7 மணிக்கு மங்கல இசையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில், விநாயகர் அபிஷேகம், ரேணுகா பரமேஸ்வரி மாரியம்மன் அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு ரேணுகா பரமேஸ்வரி மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், மகா தீபாரதனை நடைபெற்றது.

தொடர்ந்து திருக்கடவூர் அன்னை அபிராமி கோயிலில் தை அமாவாசை அன்று அபிராமி பட்டருக்கு முழு நிலவு காட்சி அளிக்கும் விழா நடைபெறுவது போன்று இந்த கோயிலில் இரவு 9 மணியளவில் அபிராமி அந்தாதி பாடல் பாடி அபிராமி பட்டருக்கு முழு நிலவுக்காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோயில் முழுவதும் உள்ள மின்விளக்குகள் அணைக்கப்பட்டு முழு நிலவு தோன்றுவது போல் காட்சிப்படுத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அபிராமி அன்னையை வணங்கினர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அன்னை அபிராமி இறைப்பணி மன்றம் செய்
திருந்தது.

The post ரேணுகா பரமேஸ்வரி மாரியம்மன் கோயிலில் அபிராமி பட்டர் முழு நிலவு காட்சி விழா: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: