×

-ஒன்றிய, பகுதி புதிய நிர்வாகிகள் நியமனம்

சேலம், டிச.3: சேலம் மத்திய மாவட்ட திமுகவில், புதிதாக ஒன்றிய, பகுதி கழககங்கள் பிரிக்கப்பட்டு, நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் மத்திய மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட காடையாம்பட்டி ஒன்றியம், நிர்வாக வசதிக்காக கிழக்கு மற்றும் மேற்கு என பிரிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள காடையாம்பட்டி கிழக்கு ஒன்றியத்திற்கு, லோக்கூர் ஆர்எஸ் பகுதியைச் சேர்ந்த அறிவழகனும், காடையாம்பட்டி மேற்கு ஒன்றியத்திற்கு, தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரனும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் சேலத்தில், பொன்னமாப்பேட்டை, செவ்வாய்பேட்டை, குமாரசாமிப்பட்டி பகுதிகளிலிருந்து, வார்டு எண் 11, 26, 29 மற்றும் 35 ஆகியவை பிரிக்கப்பட்டு, புதிதாக அரிசிப்பாளையம் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய பகுதியின் பொறுப்பாளராக, பொன்னமாப்பேட்டையைச் சேர்ந்த மணல்மேடு மோகன் என்பவரை நியமித்து, கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Tags : Union ,executives ,
× RELATED டெல்லி போராட்டத்தில் பங்கேற்று...