×

விழுப்புரத்தில் பேரறிவாளன் சிகிச்சை முடிந்து தாயாருடன் வீடு திரும்பினார்

விழுப்புரம், டிச. 1: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 29 ஆண்டு காலமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு உடல் நலக்குறைவு காரணமாக 90 நாட்கள் பரோல் வழங்க வேண்டுமென தாய் அற்புதம்மாள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின் அடிப்படையில் 30 நாட்கள் பரோல் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சையை தொடர வேண்டியுள்ளதால் கூடுதல் நாட்கள் விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். 2 வாரங்களுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டது.

 இதையடுத்து சிறுநீரக சிகிச்சைக்காக நவம்பர் 9ம் தேதி விழுப்புரத்தில் நேருஜி வீதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து போலீசார் பேரறிவாளனை அழைத்து சென்றனர். இந்நிலையில் உடல்நலக்குறைவால் உள்ள பேரறிவாளனுக்கு டிசம்பர் 7ம் தேதி வரை பரோல் நீடிக்கப்பட்டுள்ளதால் நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக தொற்று காரணமாக 2வது முறையாக விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 29ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரகத்தில் இருந்த கல் லேசர் சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேரறிவாளன் நேற்று சிகிச்சை முடிந்து மாலை 4 மணியளவில் தனது தாயாருடன் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு திரும்பினார்.

Tags : Perarivalan ,home ,Viluppuram ,
× RELATED பேரறிவாளனை விடுவிப்பது பற்றி...