×

கடலூர் மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு

கடலூர், டிச. 1:கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது. நேற்று 24 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,224 ஆனது. நேற்று 32 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் இதுவரையில் 23 ஆயிரத்து 856 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.

 மாவட்டத்தில் நோய் தொற்று காரணமாக 67 பேர் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 26 பேர் வெளி மாவட்டங்களில் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 19 ஆயிரத்து 462 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிப்பு காரணமாக மாவட்டத்தில் 1 இடம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நேற்றைய பாதிப்பில் ஏற்கனவே நோய் தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 20 பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். 373 பேர் பரிசோதனை காத்திருப்பில் உள்ளது. நேற்று நோய்தொற்றில் யாரும் இறக்கவில்லை.

Tags : Corona ,district ,Cuddalore ,
× RELATED மாவட்டத்தில் 6 பேருக்கு கொரோனா