×

வேலூர் அடுத்த அமிர்தி நாகநதியில் வெள்ளத்தில் பைக்குடன் அடித்துச் செல்லப்பட்ட தபால் ஊழியர் பலி ஜவ்வாதுமலையை சேர்ந்தவர்

போளூர், நவ.30: வேலூர் அடுத்த அமிர்தி நாகநதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பைக்குடன் அடித்துச் செல்லப்பட்ட தபால் ஊழியர் பலியானார். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை தாலுகா, கானமலை ஊராட்சி கீழ்கணவாயூர் கிராமத்தை சேர்ந்தவர் குமாரசாமி மகன் மாதவன்(22). இவரது உறவினர் சரவணன்(33). அமிர்தி கிராம அஞ்சலகத்தில் தற்காலிக ஊழியர்கள். கடந்த 27ம் தேதி இருவரும் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு, அன்று மாலை பைக்கில் வீடு திரும்பினர். அமிர்தி நாகநதி ஆற்றில் பைக்குடன் இறங்கி கரையேற முயன்றனர். அப்போது, ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் 2 பேரும் பைக்குடன் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் சரவணன் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். மாதவன் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவரது சடலத்தை பொதுமக்கள் மீட்டு, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், ஜமுனாமரத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : Vellore ,Amirthi Nakanadi ,
× RELATED பைக் மோதி தொழிலாளி காயம்