×

வந்தவாசியில் நெகிழ்ச்சி மனநலம் பாதித்த பெண்ணுக்கு புத்தாடை வழங்கிய பெண் போலீசார்

வந்தவாசி, நவ.27: வந்தவாசியில் மனநலம் பாதித்த பெண்ணுக்கு, பெண் போலீசார் புத்தாடை மற்றும் உணவு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து, மழை பாதிப்பு விபரங்களை அறிய வந்தவாசி தெற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் ெபண் காவலர்கள் கண்மணி, மணிமேகலை ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது, காஞ்சிபுரம் சாலையில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம் அருகே மனநலம் பாதித்த லட்சுமி(55) என்ற பெண், கடுங்குளிரை தாங்க முடியாமல் உடல் நடுங்கி கொண்டிருந்தார். இதை கவனித்த பெண் காவலர்கள் உடனடியாக அருகில் உள்ள துணிக்கடைக்கு சென்று புடவை, போர்வை வாங்கி வந்து அந்த பெண்ணிற்கு அணிவித்தனர். உணவு பொட்டலமும் வாங்கி கொடுத்தனர். தனக்கு புடவை மற்றும் போர்வை வழங்கி ஆதரவு காட்டிய காவலர்களை அந்த பெண் மகிழ்ச்சியுடன் பார்த்தார். இந்த சம்பவம் அங்கிருந்த மக்களை ெநகிழ்ச்சியடைய செய்தது. தகவலறிந்த டிஎஸ்பி தங்கராமன், பெண் காவலர்களின் செயலை பெரிதும் பாராட்டினார்.

Tags : police officer ,Vandavasi ,
× RELATED கலெக்டர் தகவல் நாகமங்கலத்தில் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் நியமனம்