ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கமுதி, நவ.25:  கமுதி முத்துமாரியம்மன் நகர் பகுதியில் பல வருடங்களாக கழிவுநீர் வாறுகால் இன்றி இப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். மழை காலங்களில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக இருந்தது. இப்பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பேரூராட்சி நிர்வாகம் கழிவுநீர் வாறுகால் அமைக்க நடவடிக்கை எடுத்து அப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த பகுதியில் இருந்து கழிவுநீர் வெளியேறி வரும் இடங்களில் பொதுப்பாதைகளில் தனியார் ஆக்கிரமிப்பு நிறைந்து காணப்பட்டது. இது சம்பந்தமாக முத்துமாரியம்மன் நகர் பகுதியினர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சாலைகளை அளவீடு செய்து முறைப்படுத்தி கால்வாய்களை அமைத்து தர கோரிக்கை விடுத்தனர். அதனடிப்படையில், வட்டாட்சியர் செண்பகலதா,   உத்தரவின்பேரில், முத்து மாரியம்மன் நகர் சாலை அளவீடு செய்யப்பட்டது. இதில் 30 வருடங்களாக ஆக்கிரமிக்கப்பட்ட சாலையை கண்டறிந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

Related Stories: