காலிப்பணியிடங்களை நிரப்பகோரி அரசு ஊழியர் சங்கத்தினர் மாலை நேர தர்ணா போராட்டம்

நாகை, நவ.24: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் நாகையில் மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் இளவரசன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் அந்துவன் சேரல் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அன்பழகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். ஊதிய மாற்றம் முரண்பாடுகளை களைவதற்கு ஐஏஎஸ் அதிகாரி சித்திக் குழு பரிந்துரைக்கான அரசு ஆணையை வெளியிட வேண்டும். அரசு துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்துவது திரும்பப் பெற வேண்டும். புதிய பணியிடங்கள் உருவாக்குவதில் உள்ள தடை ஆணையை ரத்து செய்ய வேண்டும். சரண் விடுப்பு ரத்து செய்ய வேண்டும். அகவிலைப்படி முடக்கம், விடுப்பு பயண சலுகை ரத்து, இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை திரும்ப பெற வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் இருந்த அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் காப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அரசுப் பணிகளை ஒப்பந்த பணிகளாக மாற்றுவதை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: